மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 14 டிச 2019

வெளிநாடு பறக்கும் விக்ரம் டீம்!

வெளிநாடு பறக்கும்  விக்ரம் டீம்!

நடிகர் விக்ரம் தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளார்.

சமீபத்தில் ஹரியின் சாமி ஸ்கொயரில் நடித்த விக்ரம், கெளதம் மேனன் இயக்கத்தில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் தனது துருவ நட்சத்திரம் பட வெளியீட்டுக்காக வெயிட்டிங்கில் உள்ளார். கெளதம் மேனன் இயக்கும் மற்றொரு படமான தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவும் ரிலீஸ் தேதியே அறிவிக்கப்படாமல் இதே நிலையில்தான் உள்ளது. இந்த தீபாவளிக்கு சர்காருடன் இந்தப்படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறி தவறி தள்ளிப் போயுள்ளது எனை நோக்கி பாயும் தோட்டா.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் தூங்காவனம் படத்தை இயக்கியவருமான ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இன்னும் பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன், அபி மெக்தி போன்றோர் நடித்துவருகின்றனர். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படம் குறித்த சமீபத்திய அப்டேட் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட வேண்டிய தேவையிருப்பதால் படக்குழு தற்போது மலேசியாவுக்குச் செல்கிறது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் இந்தியா திரும்பி படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட ஏதேனும் தகவல்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வரும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ஸ்ரீ நிவாஸ் ரெட்டி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon