மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு!

டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு!

தீபாவளிக்கு முந்தைய நாளிலேயே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

டெல்லியில், காற்று மாசுபாடு வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று காலை எங்கும் புகை படலமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். காலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

தலைநகர் டெல்லியில் டீசல் வாகனங்களால் காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இதன்மூலம், காற்று மாசு குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(நவம்பர் 5) திடீரென்று காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி தொடங்குவதற்கு முன்பே, காற்று மாசு அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, கடந்த சனிக்கிழமை வரை பொருட்களை எரிப்பது குறைவாக இருந்தது. இதனால், நேற்று குறைவாக இருந்த காற்று மாசு இன்று மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், மாசு ஏற்படுத்தும் கட்டுமானப்பணிகளுக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon