மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

நான் ஸ்லீப்பர் செல்லா? அமைச்சர் விளக்கம்!

நான் ஸ்லீப்பர் செல்லா? அமைச்சர் விளக்கம்!

தன்னைத் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று முன்னாள் எம்.எல்.ஏ. மணிகண்டன் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.கவின் 47ஆம் ஆண்டு துவக்க விழா முன்னாள் எம்.எல்.ஏ.,கள் மார்க்கண்டேயன் மற்றும் சின்னப்பன் ஆகியோரின் தலைமையில் தனி தனியாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சின்னப்பன் நடத்திய நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விளாதிகுளம் முன்னாள் எம்.எம்.ஏ. மார்க்கண்டேயன், “ தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையான அதிமுக தொண்டர்களை ஒதுக்கி வைத்து கட்சியை காலி செய்து வருகிறார் கடம்பூர் ராஜு. இந்த நிலைமை நீடித்தால் மாவட்டத்துக்கு ஒரு எம்.எல்.ஏ தான் இருப்பர் என்றார்.

மேலும் அதிமுக எம்.எல்.ஏ.,களை தினகரன் அணிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். சின்னம்மாவின் ஆதரவில் தான் எம்.எல்.ஏ சீட்டை அவர் பெற்றார். சசிகலாவின் உண்மையான ஸ்லீப்பர் செல் அவர் தான்” என குற்றம் சாட்டியிருந்தார். அதிமுக துவக்க விழா நிகழ்ச்சியை நடத்தவிடாமல் கடம்பூர் ராஜூ மறைமுகமாக கடும் தொந்தரவுகளை கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மார்க்கண்டேயனின் குற்றச்சாட்டை கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மார்க்கண்டேயன் ஏதோ விரக்தியில் பேசுகிறார். நான் ஸ்லீப்பர் செல் இல்லை என்பது கட்சி தலைமைக்குத் தெரியும், மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். அதிமுகவில் கோஷ்டிகள் என்பது இல்லை. தனி நபரின் கருத்துகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது” என கூறினார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon