மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய வீரர்!

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய வீரர்!

ஒருநாள், டி 20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் ஒரு சாதனையைப் படைத்துவருகிறார் விராட் கோலி. அவரது சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் அஸாம்.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (நவம்பர் 5) துபாயில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாகத் தொடக்க வீரர் பாபர் அஸாம் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 16.5 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மூன்றாவது போட்டியை மட்டுமல்லாமல் இந்தத் தொடரையே 3/0 என வென்றது பாகிஸ்தான்.

இந்த போட்டியின் மூலம் பாபர் அஸாம் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 27 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 1000 ரன்களைக் கடந்து கோலி சாதனை படைத்திருந்தார். கோலியின் இந்தச் சாதனையைத்தான் பாபர் அஸாம் முறியடித்துள்ளார். அவர் தனது 26வது 20 ஓவர் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் ஆகிய போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலியே முதல் இடத்தில் உள்ளார். ஆனால் டி20 போட்டியில் பாபர் அஸாம் முதலிடம் பெற்றுள்ளார். அதில் விராட் கோலி 13ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon