மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்!

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்!

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாததால் ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேண்டுமென்றே கடனைச் செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலை வெளியிடுவது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வாராக் கடன்கள் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அனுப்பிய கடிதத்தை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியை மத்திய தகவல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ரிசர்வ் வங்கி தகவல்களை வெளியிடாததால், நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததற்காக உர்ஜித் படேலுக்கு ஏன் அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது என விளக்கம் கேட்டு அவருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon