மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

இருட்டுல பரி பயந்து நின்னான். கத்துனான், எந்த பதிலும் இல்லை.

இவ்ளோ பெரிய விண்வெளியில் வெளிச்சமா இருந்தாலே, உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாது. இதுல ஒட்டுமொத்தமா இருட்டு வேற.

திடீர்னு பரியை யாரோ அடிக்கிற மாதிரி இருந்தது. பரி திடுக்கிட்டு எழுந்தான். விண்வெளியில மிதந்தான். இருட்டுல எதுவுமே தெரியல.

சட்டுன்னு ஓர் உருவம் வந்து பரியை இழுத்துகிட்டு போச்சு. கொஞ்ச நேரத்துல ஓர் இடத்துல நின்னு, பரியின் கழுத்தை நெரிக்க ஆரம்பிச்சது. பதறிப்போன பரி தன்னை விடுவிச்சுக்க துள்ளினான்.

அந்த உருவத்தோட வயித்துல எட்டி ஓர் உதை விட்டான். உடனே அந்த உருவம் பரியோட கழுத்துல இருந்த தன்னோட கையை எடுத்துட்டு வலில கத்துச்சு. உதைச்ச விசையால தூர விழுந்தான் பரி.

விண்வெளியில நீந்த ஆரம்பிச்சான். பின்னாடியே அந்த உருவம் துரத்திட்டு வருவதை உணர முடிஞ்சது. இன்னும் வேகமா மிதந்து போக முயற்சி பண்ண, ஒரு சின்ன விண்கல் மேல மோதினான். அந்த கல்லைக் கையில பிடிச்சு, பின்னாடி துரத்திட்டு வந்த உருவத்தை அந்த கல்லால் ஓங்கி அடுச்சான்.

டக்குன்னு விண்வெளியில வெளிச்சம் வந்தது.

“பரவாயில்லையே. ஒரே அடியில அவனை வீழ்த்திட்டியே!”னு பாராட்டியது குரல்.

பரிக்குப் பயங்கர கோபம். “என்னைக் கொல்லப் பாத்தா அடிக்கமா கொஞ்சுவாங்களா?”னு கோபமா கேட்டான்.

ஏளனமா சிரிச்ச அந்தக் குரல். “அதுக்கு பெயர்தான் பாதுகாப்பு உணர்ச்சி பரி. விலங்குகள் தங்களை பாதுகாத்துக்கவும், உயிரைத் தக்கவெச்சிக்கவும் சண்டை போடும். அந்த சண்டையும் தப்பில்லை. ஒரு தாய் பறவை தன் குஞ்சுகளைக் காப்பாற்ற எப்பேர்ப்பட்ட விலங்குகளையும் எதிர்த்து சண்டை போடும். அதுவும் தப்பில்லை.”

“இத நீ வாயாலையே சொல்லியிருக்கலாமே..! எதுக்கு இந்த பயமுறுத்தல் எல்லாம்?”னு பாவமா கேட்டான் பரி.

”நான் பயமுறுத்தல, நீ அடிச்சு வீழ்த்தியது யாரைன்னு திரும்பிப் பாரு”னு சொன்னது குரல்.

திரும்பிப் பார்த்த பரி, பயத்துல உறைஞ்சு நின்னான்!

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 5 நவ 2018