மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் விடுவிப்பு!

அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் விடுவிப்பு!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை அவதூறாக பேசிய வழக்கிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து ஆம் ஆத்மி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்திலும், அதன் பின்னர் தொலைக் காட்சிகளிலும் ஆம் ஆத்மி தலைவரும், தற்போதைய முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து விமர்சித்திருந்தார். இதையடுத்து, ஷீலா தீட்சித்தை தரக்குறைவாக விமர்சித்து, அவதூறு பரப்பும் வகையில் பேசி அவருடைய புகழுக்கு களங்கம் விளைவித்து விட்டதாக, தீட்சித்தின் உதவியாளர் பவன் கேரா, பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதன்படி அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 500 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பவன் கேரா, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் இல்லை. அவர் ஒரு அரசியல் ஆலோசகர் என்பதால் வழக்கை தொடுக்க முடியாது என முன்னரே கேஜ்ரிவால் தரப்பு வாதாடியிருந்தது.

இந்த வழக்கை இன்று (நவம்பர் 5) விசாரித்த கூடுதல் நீதிபதி சமர் விஷால், கேஜ்ரிவாலுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon