மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் இன்று (நவம்பர் 5) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள உப்போடை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மாதேஸ்வரன்-அம்சவல்லி. கர்ப்பிணிப் பெண்ணான அம்சவல்லி நேற்று (நவம்பர் 4) காலை பிரசவத்திற்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் அம்சவல்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அம்சவல்லி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் வலியால் துடித்து வந்த அம்சவல்லிக்கு இரவு 8 மணிக்கு மேல்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்த அம்சவல்லியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், உரியச் சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் அம்சவல்லியின் உறவினர்கள். தகவலறிந்து வந்த காவல் துறையினரும், மருத்துவர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon