மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சுகாதாரமற்ற சூழல்: ரூ.50 லட்சம் அபராதம்!

சுகாதாரமற்ற சூழல்: ரூ.50 லட்சம் அபராதம்!

கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற சூழலை உருவாக்கியதற்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதுபோன்ற காய்ச்சலைத் தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,உணவகங்கள்,கடைகள் போன்றவற்றுக்கு பொது சுகாதாரம், மாநகராட்சி,நகராட்சி மற்றும் பல்வேறு உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது சோதனையும் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற சூழலை வைத்திருந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 50 லட்சம் வரை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் இணைந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவம்பர் 5) ஆய்வு செய்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத் துறை இயக்குநர் எட்வின் ஜோவிற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon