மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 18 ஜன 2020

இங்க வெடிச்சா டில்லிக்கு கேட்குமா: அப்டேட் குமாரு

இங்க வெடிச்சா டில்லிக்கு கேட்குமா: அப்டேட் குமாரு

ஒரு வாரமா கூட்டம் கூட்டமா கிளம்பி கொத்து கொத்தா ஊரை காலி பண்ணிட்டாங்க. கோயம்பேடு பக்கம் போனேன். என்னடா கூட்டத்தையே காணோம்னு பார்த்தா, எல்லாரும் தியேட்டர்ல டிக்கெட் ரிசர்வேசனுக்கு நிற்குறாங்க. சரி இங்க தான் கூட்டம்னு பார்த்தா ஒவ்வொரு தெரு முனையிலயும் தீபாவளி பர்ச்சேஸ் நடக்குது. என்ன பெரிய பர்ச்சேஸ் அதான் நம்ம சர்காரோட டாஸ்மாக் தான். இன்னொரு விஷயம் தெரியும் சரக்கு அடிக்கிறவங்களுக்கு ஒருத்தர் பரிசு கொடுக்கிறதா விளம்பரம் பண்ணிருக்காரு. அவர் மேலே கேஸ் போட்ருக்காங்க. எங்க அப்படியே டார்கெட் பிக்ஸ் பண்ணி விற்க சொல்ற அரசாங்கத்து மேல கேஸ் போடுங்கன்னு நம்ம நெட்டிசன்ஸ் கொதிச்சு போயிட்டாங்க. இந்த பிரச்சினையில இதை மறந்துட்டேன் பாருங்க. மணி ஏழு ஆயிடுச்சு, பட்டாசை கொளுத்தி போட்டுட்டு வாரேன்.

@Kozhiyaar

ஹாஸ்டல்ல இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போகும் போது, படிக்கிறதுக்காக பாடப் புத்தகத்தை எடுத்துட்டு போவதெல்லாம் வேற லெவல் தன்னம்பிக்கை!!!

@DrLavena

தாய்:டேய் மகனே! வெடி போடுறதுக்கு ன்னு allot பண்ணியிருக்குற time ல தான் தம்பி வெடிக்கனும்.... சுப்ரீம் கோர்ட் rules போட்ருக்காங்கப்பா!

8வயது மகன்: சுப்ரீம்கோர்ட் டெல்லில தான இருக்கு....

நான் இங்க வெடிக்குறது சுப்ரீம் கோர்ட்டுக்கு கேக்கவா போகுது?

போவீங்களா!!

தாய்:???

@HAJAMYDEENNKS

டெல்லியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மகன் பட்டாசு வெடித்ததால், தந்தை கைது - செய்தி #

கோடி கோடியா கடன் பாக்கி வச்சவனை தப்பிக்க விட்டுட்டு வெடி வெடிச்சவனை கைது செய்றாங்க..!

@kathir_twits

ஒரு நல்ல குணம் இருக்கிறதே என்று பலமாக நினைத்து சமாதானம் செய்து கொள்ளாதீர்.

இங்கே வாழ பல நற்குணங்கள் அவசியம் !!

@ajmalnks

"ஆர் எஸ் எஸ் ஒரு சமூக சேவை இயக்கம்" - தமிழிசை

இத்துடன் சிரிச்சா போச்சு ரவுண்டு முடிஞ்சு போச்சு.

@Kozhiyaar

நம்ம ஆளுங்களுக்கு சட்டத்தை விட அதில் உள்ள ஓட்டைகளே அதிகமா தெரிஞ்சிருக்கு!!

@ajmalnks

குழந்தைகளை பொறுத்தவரை பட்டாசுகளை பத்தவைக்கும் தந்தையே அவர்களது ஹீரோ.

@Thaadikkaran

தியேட்டரில் பர்ஸ்ட் ஷோ பார்ப்பதைவிட தமிழ் ராக்கர்ஸில் வருவதற்கு முன்னரே படத்தை பார்த்திடனும்னு ஒரு நிலைக்கு வந்துவிடணும் போல..!

@sultan_Twitz

”1000 ரூபாய்க்கு மேல் மது அருந்தினால் தீபாவளி பரிசு இலவசம்” என பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கைது - செய்தி #

தீபாவளி பரிசு என்ன சவப்பெட்டியா..?!

@ajmalnks

டி.டி.வி தினகரனும் மு.க.ஸ்டாலினும் பலமுறை சந்தித்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது - OPS பேட்டி

நீங்க தர்மயுத்தம் நடத்தியபோது தினகரனை ரகசியமா சந்திச்சது மாதிரியா?

@HAJAMYDEENNKS

டெல்லியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மகன் பட்டாசு வெடித்ததால், தந்தை கைது - செய்தி #

தந்தை மகனுக்காற்றும் உதவி !

@itzkarthik_v

"ஏழை மாணவர்கள் தற்போது அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வுதான் முக்கிய காரணம்" - தமிழிசை

ஆனா பாவம் நம்ம அனிதா மாதிரி மல்டி மில்லினியர் வீட்டு பொண்ணுங்களுக்கு தான் இடமில்ல போல...

@idumbaikarthi

பட்டாசு வெடிப்பதை வரைமுறைப்படுத்துவது போல மதுபானக்கடைகளின் நேரத்தையும் 2 மணி நேரமாக்கி இரண்டு நாட்களுக்காவது வரைமுறைப்படுத்தலாமே.?

@Thaadikkaran

வீட்டு சுப நிகழ்ச்சியில் ஒருவர் இருந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தால் ஒண்ணு அவருக்கு மேல் பேன் இருக்கணும் இல்லேன்னா அங்க டவர் நல்லா கிடைக்கணும்..!

@sultan_Twitz

கிறிஸ்துமஸ் கேக் தயாரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ - செய்தி #

தலைவரே பாத்து கேக்ல முந்திரி பருப்புக்கு பதிலா தெர்மாகோலை கலந்துற போறிங்க?!

@gips_twitz

டெல்லியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மகன் பட்டாசு வெடித்ததால், தந்தை கைது - செய்தி #

நல்லவேளை கல்யாணம் பண்ணாதால தப்பிச்சேன்...

@manipmp

இப்ப சர்க்கார் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கிறவனெல்லாம் யாருனு நெனச்சே.. நேத்து வரைக்கும் முருகதாஸை கழுவி ஊத்தின பயலுகதேன்

@amuduarattai

பாஜக ஆட்சி கார்ப்பரேட்க்கான ஆட்சி அல்ல; காமன்மேன்க்கான ஆட்சி - தமிழிசை

அந்த 'காமன்மேன்'ங்கறது அம்பானியும், அதானியும் தானே.?

@shivaas_twitz

தீபாவளி வசூலில் போட்டி போட போகும் சர்க்கார் & சரக்கார்..!

@amuduarattai

ஏழை மாணவர்கள் தற்போது அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வுதான் முக்கிய காரணம்" - தமிழிசை

பிரதமர் ஏழை மகன் என்பதால், நீட் தேர்வுக்கு பிறகு, மருத்துவம் படிப்பவர்கள் ஏழையாகத் தான் தெரியும் உங்களுக்கு.

@rahimgazali

ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு: போர்டு வைத்த பார் உரிமையாளர்கள் கைது #

தீபாவளிக்கு 350 கோடி இலக்கு வைத்த அரசாங்கத்தை என்ன செய்வது?!

@mufthimohamed1

பாஜக ஆட்சி கார்ப்பரேட்க்கான ஆட்சி அல்ல; காமன்மேன்க்கான ஆட்சி

- தமிழிசை சவுந்தரராஜன்

படம் ரிலிஸ் ஆகரதுக்கு முன்னாடியே ரிவிவ் குடுக்கிறிங்களே, நீங்க தமிழிசையா இல்ல தமிழ்ராக்கர்ஸா.

@வாட்ஸப்பில் வந்தவை

கோவை சிறப்புச் செய்திகள் - பிக் பிரேக்கிங்:

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிஜிலி வெடி வைத்ததாக கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் கைது..

நான் 6.59 க்கே பத்த வச்சுட்டேன் அது லேட்டாக வெடித்ததாக சிறுவன் தன் தரப்பு நியாயத்தை கூறியதாக கூடுதல் தகவல்..

அனுமதிக்கபட்ட நேரம் கடந்தும் வெடித்ததால் தாராபுரத்தில் சுருள் கேப் 15 மற்றும் 2துப்பாக்கிகள் பறிமுதல்..

எங்களை பழிவாங்கும் நோக்கத்தில் எங்கள் வீட்டில் பத்தவச்ச சரத்தை பக்கத்து வீட்டுகாரர்கள் வீசிவிட்டார்கள் என்று திருப்பூரை சேர்ந்த ஆசிரியர் குடும்பம் போலீஸில் புகார்..

CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆசிரியர் புகார்

பலமான சத்தத்துடன் வெடித்த அணுகுண்டுக்கு பக்கத்தில் 3 சிறுவர்கள் பத்தி குச்சியுடன் நின்றதால் போலீஸார் யாரை கைது செய்வது என குழப்பம்..

சிறப்பு புலனாய்வுக்குழு பொள்ளாச்சி வருகை..

ஓலை பட்டாசு வைத்த உடுமலை விவசாயி தலைமறைவு..

மயிலை விரட்ட அவர் தினமும் வெடிப்பார் என நமது சிறப்பு நிருபர் தகவல்..

பல்லடத்தில் ஒரு வீட்டில் பெரிய வெடி சத்தம் கேட்டதாக போலிசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு விசாரணை நடத்தியதில் அந்த வீட்டு பெரியவருக்கு கேஸ் ட்ரபிள் என்று தகவல்..

களத்தில் உள்ள நமது சிறப்பு நிருபர் கூறுவது:

இதுவரை 200 துப்பாக்கிகள். 500 சீனிவெடி, 1000 க்கும் மேலான ராக்கெட்டுகள், சங்கு சக்கரம் புஸ்வானம் போலிசாரால் கைப்பற்றபட்டுள்ளதாக கூறியள்ளார்.

-லாக் ஆஃப்

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon