மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

இளைஞருக்கு வழிவிட்ட காம்பீர்

இளைஞருக்கு வழிவிட்ட காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கி வந்த கௌதம் காம்பீர் தற்போது ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிவருகிறார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த காம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12ஆம் தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த அணியின் கேப்டனாக ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 வயதான நிதிஷ் ராணா இதுவரை 24 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னதாக நேற்றைய இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்துப் போட்டியை தொடங்கி வைத்தார். அதற்கு காம்பீர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அசாருதீன் பெல் அடித்து போட்டியைத் தொடங்கி வைத்ததற்கு காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்துவிட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon