மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனை!

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனை!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக செயல்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இம்மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சலுக்காக இம்மருத்துவமனையில் தனிப்பிரிவு வார்டு செயல்படுகிறது. இந்த தனிப்பிரிவு வார்டை இன்று பார்வையிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. மேலும் அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவர்களின் நிலைகளை மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைவாக உள்ளது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருசிலர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக செயல்படுகின்றன" என்று தெரிவித்தார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon