மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்!

ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்!

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கோவை கைகோலபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று (நவம்பர் 4) நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சிலர் நடனமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். அமைச்சரின் நடனத்தைப் பார்த்து அங்கிருந்த அதிமுக தொண்டர்களும் அவருடன் நடனமாடத் தொடங்கினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது ஆறுகுட்டி எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு நடனமாடி வாக்கு சேகரித்தார். அப்போது அவரது நடனம் இடம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

தற்போது அமைச்சர் வேலுமணியின் நடன வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon