மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஏர்செல் மேக்சிஸ்: அசோக் சாவ்லா பதவியில் தொடரலாம்!

ஏர்செல் மேக்சிஸ்: அசோக் சாவ்லா பதவியில் தொடரலாம்!

ஏர்சல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அசோக் சாவ்லா தேசியப் பங்குச் சந்தையின் தலைவராக தொடரலாம் என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி மதிப்பிட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ததாகவும், அதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அசோக் சாவ்லா, இணைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா, செயலாளர்கள் ராம் ஷரன், மற்றும் தீபக் குமார் மற்றும் அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அசோக் ஜா உள்ளிட்ட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள அசோக் சாவ்லா தேசிய பங்குச் சந்தையின் தலைவராக நீடிக்கக் கூடாது என்று செபியிடம் அக்டோபர் முதல் வாரத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை விசாரித்த செபி, தேசிய பங்குச் சந்தையின் தலைவராக உள்ள அசோக் சாவ்லா தொடர்ந்து தனது பதவியில் நீடிக்கலாம் என்று தற்போது தனது மதிப்பீட்டில் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அசோக் சாவ்லா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நவம்பர் 26ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon