மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 18 ஜன 2020

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

இன்று மாலை நடை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக அஞ்சு என்ற பெண் பம்பைக்கு வந்துள்ளார்.

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துக்கு இடையே சன்னிதானம் நடையை திறந்து வைத்தார் மேல்சாந்தி. நாளை இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். கோயிலுக்கு வருகை தரும் பெண் பக்தர்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடக நிறுவனங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வந்தால் சன்னதியை மூடுவோம் என மேல்சாந்திகள் எச்சரித்துள்ளனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதி வழியாக வரும் வாகனங்களை நேற்றிலிருந்து போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கொன்றில் கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் செய்தியாளர்களை தடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. கோயிலில் தினசரி நடவடிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்றும் வாகனங்களை சேதப்படுத்திய போலீசார் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சபரிமலையில் ஊடகங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சபரிமலை வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள மாநில ஐஜி அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,சேர்லதா என்ற இடத்திலிருந்து சபரிமலை செல்வதற்காக,பெண் பக்தை அஞ்சு பம்பைக்கு வந்துள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon