மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

விதிகளைத் தளர்த்திய கோல் இந்தியா!

விதிகளைத் தளர்த்திய கோல் இந்தியா!

சிறு வாடிக்கையாளர்களுக்கான விநியோக விதிகளை கோல் இந்தியா நிறுவனம் தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் நவம்பர் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எல்லா துறை வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் விதிகளை தளர்த்த வேண்டிய நேரம் இது. சிறு வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோல் இந்தியாவின் விநியோக விதிகள் தளர்த்தப்படுகின்றன. இனிமேல் ஒரு மில்லியன் டன்னுக்கும் குறைவான அளவில் நிலக்கரி தேவைப்பட்டாலும் விநியோகம் செய்ய கோல் இந்தியா தயாராக உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் நிலக்கரி மட்டும் தேவைப்படும் சிறு நிறுவனங்களுக்கும் இனிமேல் விநியோகம் செய்ய கோல் இந்தியா முன்வந்துள்ளது. ஒரு லட்சம் டன்னுக்கு குறைவான அளவில் நிலக்கரி தேவைப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே கோல் இந்தியாவின் இம்முடிவுக்குக் காரணமாகவுள்ளது. முன்னதாக ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது