மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

அதிகரிக்கும் ஸ்வைப்பிங் பயன்பாடுகள்!

அதிகரிக்கும் ஸ்வைப்பிங் பயன்பாடுகள்!

ஏடிஎம்களையும் தாண்டி டெபிட் கார்டுகளின் வர்த்தகப் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் டெபிட் கார்டுகள் ஏடிஎம்களில் மட்டும் அதிகளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இப்போது ஏடிஎம்களில் மட்டுமல்லாமல் வர்த்தகப் பயன்பாடுகளுக்கு டெபிட் கார்டுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டெபிட் கார்டுகள் ஏடிஎம்களுக்காகவே 95 விழுக்காடு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஸ்வைப்பிங் மெஷின்கள் மற்றும் மின்னணு வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக டெபிட் கார்டுகள் 31 விழுக்காடு பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து விஜயா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆர்.ஏ.சங்கர நாராயணன் டி.என்.என் ஊடகத்திடம் பேசுகையில், “ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் பண்டிகைக்கால சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் எங்களது கிராமப்புற வாடிக்கையாளர்கள் மின்னணு வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக டெபிட் கார்டுகளை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தாலும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon