மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

குரல் யார்னு கண்டுபிடிச்சாச்சு!

பரி அடிச்சு வீழ்த்துனது, அந்த ஊரில் ‘பெரியவுக’ என்று சொல்லப்படும் ஒருத்தரை.

அவர்கிட்டதான் பரியோட அப்பா வேலை செஞ்சாரு.

அவர் இறந்துட்டாரா? இல்ல மயங்கிக் கிடக்குறாரானு பரிக்குத் தெரியல.

பரிக்கு பயத்துல வியர்த்திடுச்சு. இப்போ என்ன செய்யுறதுன்னே தெரியாம முழிச்சிட்டு நின்னான்.

“இந்தச் சண்டைதான் தவறு பரி.” பேச ஆரம்பிச்சது குரல்.

“இது போன்ற மனிதர்கள், தங்கள் அதிகாரத்துக்காக மத்தவங்க கிட்ட சண்டை போடுறாங்க. தங்களோட தேவைக்காக மத்தவங்களைக் காயப்படுத்துறாங்க!”.

பரிக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. அமைதியா இருந்தான்.

“உங்க குளத்துல உங்களை குளிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே.. அதுக்குக் காரணம் அதிகாரம்தான். அந்த அதிகாரம்தான் உன் நண்பனை அந்த குளத்துக்குள்ள மூழ்கடிச்சுக் கொன்றது”ன்னு அந்த குரல் சொல்ல, பின்னாடி நீலன் வந்தான்.

பரிக்கு மூச்சு முட்டியது. குளத்துல காணாம போன நீலனைப் பார்த்த கணத்துல, பரியோட கண்கள்ல கண்ணீர் குளமா தேங்கி நின்னுச்சு.

பரி எழுந்து தன் நண்பனைக் கட்டிப்பிடிச்சு அழுதான். ஆனா, நீலன் கிட்ட எந்தவொரு மாற்றத்தையும் பாக்க முடியல.

“பரி, அழுகுறதை நிறுத்து” - சொன்னது குரல் அல்ல, நீலன்.

அப்போதான் பரிக்குத் தெரிய வந்தது, இவ்வளவு நேரம் அவன்கூட பேசிய குரல் - நீலன்தான்!

- நரேஷ்

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon