மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தனியார் நிதி நிறுவன நிர்வாகிகளின் முன் ஜாமீன் ரத்து!

தனியார் நிதி நிறுவன நிர்வாகிகளின் முன் ஜாமீன் ரத்து!

நிலம் வாங்கித் தருவதாக ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டிஸ்க் அசர்ட் என்ற தனியார் நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (நவம்பர் 5) மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, முன்னாள் நிர்வாகிகள் ஜனார்த்தனன், உமாசங்கர், அருண் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல், பொய் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி, மூவரின் முன் ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

வரும் 8ஆம் தேதி மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும், தவறினால் அவர்களைக் கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூவரும் தங்களுடைய பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon