மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

வேலையில்லா தட்டுப்பாடு அதிகரிக்கும்!

வேலையில்லா தட்டுப்பாடு அதிகரிக்கும்!

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 10 கோடி பேருக்கு வேலைகள் தேவைப்படும் என்று பிடபுள்யூசி ஆய்வு கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வில் மேலும் கூறுகையில், ‘உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. 2027ஆம் ஆண்டில் பணிபுரியும் வயது வரம்பில் இந்தியாவில் புதிதாக 10 கோடி பேர் இணைவார்கள். இது ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்காகும். அதாவது அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 7.8 கோடி வேலைவாய்ப்புகள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பிகார் மற்றும் அசாம் 10 மாநிலங்களில் மட்டுமே தேவைப்படுகிறது. படித்து வெளியேறும் இளைய தலைமுறையினர் இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதே இந்தியாவில் வேலைவாய்ப்பு தேவைகள் அடுத்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நடுத்தர வயதினர் 27.6 விழுக்காடு மட்டுமே. 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளனர். அதேபோல 35 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 65 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. இந்திய தொழிலாளர் பங்களிப்பில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அமைப்புசாரா துறைகளில்தான் பணியாற்றுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையான 2.4 கோடியைப் போல, ஐந்து மடங்கு கூடுதலான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் தேவைப்படும் என்று இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon