மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 நவ 2019

த்ரில்லரையும் விட்டுவைக்காத ஜி.வி

த்ரில்லரையும் விட்டுவைக்காத ஜி.வி

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமானாலும் நடிப்பில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் படங்களைத் தேர்வு செய்துவருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

கமர்ஷியல் பாணியிலான படங்களில் நடித்தாலும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் கைவசம் சுமார் பத்து படங்கள் வரை உள்ளன. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படத்தின் டீசர் நேற்று (நவம்பர் 5) வெளியாகியுள்ளது.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முக்கிய காட்சி ஒன்று ஒரு பெரிய வீட்டின் உட்புறம் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சண்டை நடைபெறும் அக்காட்சி டீசரில் இடம்பெற்றுள்ளது. சுமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டைட்டில் போஸ்டரில் ஏற்கெனவே நாய் ஒன்றின் படம் இடம்பெற்றிருந்தது. படத்திலும் நாய்க்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு நிரவ் ஷா, சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆண்டனி படத் தொகுப்பாளராகப் பணியாற்ற அருண்ராஜா காமராஜ் பாடல்களை எழுதியுள்ளார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

வாட்ச்மேன் டீசர்

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon