மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டோம்: சிறிசேனா

பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டோம்: சிறிசேனா

புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவைப் பிரதமராகப் பதவி பிரமாணம் செய்துவந்தார்.

எனினும், தான் பிரதமராகத் தொடர்வதாக தெரிவித்துவரும் ரனில், பிரதமர் மாளிகையையும் காலி செய்ய மறுத்துவருகிறார்.

நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என சிறிசேனா அறிவித்துள்ளார். அன்றைய தினம் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எம்.பி.க்கள் பேரம் இலங்கையில் நடந்துவருகிறது.

இந்த நிலையில், ராஜபக்சே மற்றும் சிறிசேனாவுக்கு ஆதரவாகத் தலைநகர் கொழும்புவில் நாடாளுமன்றம் அருகே நேற்று (நவம்பர் 5) பேரணி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கெடுத்தனர். ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர்கள் கோஷம் எழுப்பினர். சிறிசேனாவும் ராஜபக்சேவும் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

ராஜபக்சே கட்சியின் கொழும்பு தலைவரான பிரதீப் கரியவாசம் பேசுகையில், தன்னைப் பிரதமர் என்று ரனில் கூறிக்கொண்டாலும் மக்கள் எங்களுடன் உள்ளனர். பிரதமரைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், அரசியலமைப்பு விளக்கங்களுக்குப் பின்னால் மறைந்து கொள்ளாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

பேரணியில் பேசிய சிறிசேனா, “உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்குப் பொருந்தாத, வெளிநாட்டு கொள்கைகள்படி செயல்படும் ஒரு பார்வையை நான் அகற்றியுள்ளேன்.

ரனிலின் பொருளாதார மற்றும் அரசியல் பார்வை காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்” என்று பேசினார். மேலும், “113 எம்.பி.க்களின் ஆதரவு எங்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்சே பேசுகையில், “தமிழ், இஸ்லாமிய மக்கள் மற்றும் அவர்களது கட்சிகள் நம் நாட்டைக் கட்டமைப்பு உதவ வேண்டும். நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை எப்போதும் நம்பலாம்” என்று கூறினார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon