மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 19 பிப் 2020

வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது!

வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது!

அமெரிக்கா - சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என்று அலிபாபா நிறுவனர் ஜேக் மா கூறியுள்ளார்.

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு அளவுக்கு அதிகமான வரியை விதித்து வருகின்றன. இதனால் இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு 500 பில்லியன் டாலருக்கும் கூடுதலான மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் இந்த வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என்று அலிபாபா நிறுவனர் ஜேக் மா கூறியுள்ளார். சீனாவின் ஷாங்காயில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச இறக்குமதி கண்காட்சி தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் ஜேக் மா நேற்று (நவம்பர் 5) கலந்துகொண்டு பேசுகையில், “அமெரிக்காவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாவதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பொருளாதார நடவடிக்கைகளால் தடுத்துள்ளார். இதனால் பெரிய பிரச்சினைகள் உருவாகும். வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது. சீனாவின் இந்த இறக்குமதி முயற்சிகள் உள்நாட்டில் பல தொழில்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும். ஆனால், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு யாரும் கவலையடையத் தேவையில்லை” என்றார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon