மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தீபாவளி கொண்டாடும் நாடுகள்!

தீபாவளி கொண்டாடும் நாடுகள்!

இந்தியா முழுவதும் இன்று (நவம்பர் 6) தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைக் கட்டி வருகிறது. இந்தியா போன்று மற்ற பிற நாடுகளும் இன்று தீபாவளி பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடிவருகின்றன.

இந்தியா

இந்தியாவில், மக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவர். மற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வர்.

இலங்கை

இந்தியாவில் கொண்டாடுவது போன்று, இலங்கையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இங்கு, தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படும். இலங்கையில் தீபாவளி கொண்டாட்டம் ஆன்மிக சடங்குகள், இனிப்பு விநியோகங்கள், எண்ணெய் விளக்குகள் வாண வேடிக்கைகளை வெடிக்கச் செய்வது ஆகியவை உள்ளடங்கும்.

மலேசியா

மலேசியாவில் தீபாவளி 'ஹரி தீபாவளி' என்ற மற்றொரு பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மலேசியாவில் 80 சதவிகித இந்து மக்கள் உள்ளனர். இந்தத் திருவிழா மிகவும் பிரபலமானதல்ல என்றாலும் தீபாவளியன்று தொங்கவிடப்படும் விளக்குகள் அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்த்துவிடும். மலேசியாவில் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் இந்த விழாவை விளக்குகளுடன் கொண்டாடுவார்கள். அதுமட்டுமில்லாமல், மற்ற நாடுகளிலிருக்கும் மக்களைத் தங்கள் இடத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்வார்கள்.

இந்தோனேசியா

இந்தோனேசியாவின் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகையைப் பெருமளவில் விரும்புவார்கள். அங்கு இந்தியர்கள் மட்டுமில்லாமல், அந்நாட்டுக்காரர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இங்கு. வாண வேடிக்கைகளும், வீடுகளில் ஒளிரும் விளக்குகளும் மனதை கவரும்.

பிரிட்டன்

பிரிட்டன் மற்றும் இந்தியா வலுவான கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. காலனித்துவ ஆதிக்கத்தை பிரிட்டனும் அனுபவித்து இருப்பதால், இந்த உணர்வு, தீபாவளி பண்டிகையின்போது இரு நாடுகளிலும் வெளிப்படும். பல இந்தியர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர், அவர்கள் இந்தியாவில் கொண்டாடுவதைப் போன்று தீபாவளி கொண்டாடுகிறார்கள். பிரிட்டனில் குளிர்காலத்தில் தீபாவளி வருகிறது. பல முக்கிய தெருக்களும் சந்தைகளும் தீபாவளி பண்டிகைக்கு அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

பிஜி

பிஜியில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அங்கேயும் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிஜியில் இந்தியர்கள் பல ஆண்டுகளாகவும் தலைமுறையினராகவும் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் தீபாவளியை இந்தியாவின் பாரம்பரியத்தைப் பின்பற்றிதான் கொண்டாடுவார்கள்.

கயானா

கயானாவில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்து காலண்டரில் குறிப்பிட்டுள்ள தேதியில்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டம் 1980களின் ஆரம்பத்தில் இந்தியச் சமூகத்தால் கயானாவில் தொடங்கியது. இங்கு தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பாரம்பரியம் இனிப்பு விநியோகிப்பதுதான்.

தாய்லாந்து

தாய்லாந்தில் தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்படும் வாண வேடிக்கை மற்றும் வெப்பக் காற்று பலூன்களும் வானத்தை அலங்கரிக்கும். இங்கு வாழை இலைகள் மற்றும் மெழுகுவத்திகளால் செய்யப்பட்ட விளக்குகள்தான் பயன்படுத்தப்படும்.

மொரிஷியஸ்

மொரிஷியஸில் 50 சதவிகித இந்தியர்கள் இருப்பதால்,இந்தியா போன்றே அங்கேயும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ரங்கோலி கோலம் போட்டு, அதன்மீது மண் விளக்குகளை வைத்து தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon