மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்த்திய பணமதிப்பழிப்பு!

டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்த்திய பணமதிப்பழிப்பு!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

இன்னும் 2 நாட்களில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக 2016 நவம்பர் 8ஆம் தேதி மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலதரப்பினரையும் கடும் அவதிக்குள்ளாக்கியது. நாள் கணக்கில் மக்கள் ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தனர். சிறு குறு நடுத்தர தொழில்கள் ஆண்டுக்கணக்கில் முடங்கின. ஆனாலும் இதுவரையில் இந்த நடவடிக்கையால் எவ்வளவு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் ரொக்கப் பணத்துக்கு அப்போது நிலவிய தட்டுப்பாட்டால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினர். ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு கடந்த 2 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தது. இதனால் பணமதிப்பழிப்புக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. இதை ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) வழியாக 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.98,000 கோடி மட்டுமே பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒரே ஆண்டில் அதிக வளர்ச்சி கண்டு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.14,182,000 கோடியும், 2018 செப்டம்பரில் ரூ.18,015,000 கோடியும் NEFT வழியாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங் மூலமாக 2016 செப்டம்பரில் ரூ.1,04,300 கோடியும், 2017 செப்டம்பரில் ரூ.1,86,200 கோடியும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இணைய வங்கிகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகின்றன. நேரடியாக சென்று பரிவர்த்தனைகள் மேற்கொள்வதைக் காட்டிலும், மொபைல் போனில் இருந்த இடத்திலேயே எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக இருப்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon