மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 பிப் 2020

மலை மீது ஒரு சென்ட்ரல் ஸ்டேஷன்!

மலை மீது ஒரு சென்ட்ரல் ஸ்டேஷன்!

திரைப்படங்களில் உள்ள கதைகளைப் போலவே அது படமாக்கப்பட்டது குறித்த தகவல்களும் சுவாரஸ்யமானவை. ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் அத்தகைய தன்மை கொண்டதாகவே உள்ளன.

அப்பாவி மக்கள் சைபர் உலகில் மாட்டிக்கொள்வது குறித்து உருவாகிவரும் படம் ‘எவனும் புத்தனில்லை’. அண்ணன் - தங்கை சென்டிமெண்டுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை விஜய சேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ஸ்வாஸிகா, நிஹாரிகா, நபி நந்தி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள கொழுகு மலையில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதி ஆசியாவிலேயே உயரமான இடத்தில் தேயிலை பயிரிடப்படும் இடமாகும். அங்குள்ள குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 6,000 அடி உயரத்தில் உள்ள அந்த இடத்திற்குப் பெயர் சென்ட்ரல் ஸ்டேஷன்.

பிரிட்டிஷ் காலத்தில் அங்கு 300 குடும்பங்கள் இருந்துள்ளன. அங்கிருந்து அடிவாரத்துக்கு வருவதற்கு எட்டு மணி நேரம் ஆகும். எனவே விஞ்ச் (a winch) மூலம் பொருள்களை கயிறு கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதன் உச்சியில் உள்ள இடத்திற்கு டாப் ஸ்டேஷன் எனவும் நடுவில் உள்ள பகுதிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் என்றும் பெயரிட்டுள்ளனர்.

அங்கு ஹோட்டல் உள்ளிட்ட எந்த வசதியும் கிடையாது. படக்குழுவினர் 19 நாள்கள் கிராமத்தினருடனே தங்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon