மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

நவம்பர் 8 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்!

நவம்பர் 8 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்!

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நவம்பர் 8ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலின் பகுதியில், இலங்கை தீவிற்கு அருகே குறைந்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலை ஒட்டிய மாலத்தீவு மற்றும் அதனை சார்ந்த லட்சத் தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு பகுதி நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரிக்கடல் இடையே இன்று தொடங்கி வியாழக்கிழமையன்று (நவம்பர் 8) கடலைக் கடக்கவுள்ளது. இதனால், கடலில் 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon