மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

டிஜிட்டல் அரிச்சந்திரான்னா யாரு: அப்டேட் குமாரு

டிஜிட்டல் அரிச்சந்திரான்னா யாரு: அப்டேட் குமாரு

வெடி வெடிக்க நேரம் குறிச்சவங்க அப்படியே இந்த வாட்ஸ் அப் மெசேஜுக்கும் ஒரு வழி சொல்லியிருக்கலாம். காலையில ஆரம்பிச்ச சத்தம் பட்டாசு மாதிரி வெடிச்சுகிட்டே இருக்கு. அதுலயும் இவங்க அனுப்புற ஜிஃப் பைல், கொடுமையிலும் கொடுமை. புது நம்பர்ல இருந்துலாம் வாழ்த்து சொல்லி போட்டோ அனுப்புறாங்க. அந்த முகத்தை எல்லாம் இதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்ல. என்னைய மாதிரியே பல பேரு இதனால பாதிக்கப்பட்டு இருக்காங்க போல. ட்விட் போட்டு கண்ணீர் வடிக்கிறாங்க. இந்த தீபாவளி பலகாரம், பட்டாசு, சர்கார்ன்னு இன்னைக்கு நிறையா டாபிக் இருந்ததால அந்த இடைத் தேர்தல் தோல்வியை யாரும் கண்டுக்கவே இல்லை. இது மட்டும் ஏதாவது இடைப்பட்ட நாளுல வந்துருந்தா இதையே தீபாவளியா கொண்டாடி இருப்பாங்க. இந்த விஷயத்துல டிஜிட்டல் அரிச்சந்திரா தப்பிச்சிட்டாரு. யாரு அதுன்னா கேட்குறீங்க, அப்டேட்டை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

@Kozhiyaar

அப்பா காசை 'கரி'யாக்கி இருக்கிறோம் என்பதை அப்பா ஆன பின் தான் உணர்கிறேன்!!!

@Ramk8062

எல்லாரும் என்ன கதை னு தெரிஞ்சிக்க தியேட்டருக்கு போவாங்க, ஆனா நாம தான் எந்த படத்தோட கதைனு தெரிஞ்சிக்க தியேட்டருக்கு போவாம்

@Thaadikkaran

படத்தின் ப்ரோமோசனுக்கு நடிகர் நடிகைகளே வராத இக்காலத்தில், தமிழிசை அக்கா வருவது புரோடியூசருக்கு சற்று ஆறுதலான விஷயமா இருக்கும்..!

@saravananucfc

பிடிச்ச பலகாரத்தை பதுக்கனும், தீபாவளி காசு நிறைய தேத்தனும் என்பதுலாம் முன்னொரு கால லட்சியங்கள்‌.

@வெ. பூபதி

வீட்டில் எல்லோருக்கும் புது ட்ரஸ் எடுத்துக் கொடுத்துட்டு, ஓட்டைகள் நிறைந்த பனியனோடு தீபாவளியை அசால்டாகக் கடக்கும் அப்பாக்கள் நிறைந்த சமூகம் இது!

@gips_twitz

மும்முனை அணுஆயுத தாக்குதலை தொடுக்கும் வல்லமை இந்தியா பெற்றுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

உங்க வல்லமை பூராம் நாட்டு மக்களை தான்யா தாக்குது

@Thaadikkaran

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்குறதைவிட, வாட்சப்ல திரும்ப திரும்ப வர்ற ஒரே பார்வர்ட் தீபாவளி வாழ்த்துக்களை டெலிட் பண்ணவே நேரம் சரியா இருக்கு..!!

@Kozhiyaar

சர வெடியை பிரித்து ஒற்றை வெடியாக வெடிக்கும் அளவிற்கு பொறுமையாக இருந்த காலத்தில் இருந்து சரவெடி வெடித்து முடிக்கும் அளவிற்கு கூட பொறுமை இல்லாத காலக்கட்டத்திற்கு மாறி விட்டிருக்கிறேன்!!

@Fazil_Amf

பாஜக ஆட்சி கார்ப்பரேட்க்கான ஆட்சி அல்ல; காமன்மேன்க்கான ஆட்சி - தமிழிசை

- மைக்க தூத்துக்குடி மக்களிடம் கொடுங்க..!!!

@yugarajesh2

அடேய்! நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா வெடி வெடிக்காதேடா போலீஸ் கைது செய்திடும்னு பையன் கிட்ட பயத்தோட சொன்னால், அடப்போப்பா? போலீஸ் பிடிக்க வந்தால் இது H.ராஜா வெடி,இது SVசேகர் வெடின்னு சொல்லிடுவேன் போலீஸ் கைது செய்யாமல் திரும்பி போயிடும்னு பையன் அசால்டா சொல்றான்.

@Thaadikkaran

முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வாங்கிய ரசிகன் அன்றைய இரவை கடப்பதற்குள் இரவு டூட்டி பார்க்கும் வாட்ச்மேனை போலவே மாறிவிடுவான்..!

@வெ. பூபதி

மனைவி: ஏங்க... பையன் என் பேச்ச கொஞ்சங்கூட கேட்க மாட்டேங்குறான்.

கணவன்: இரு. அவனோட மிஸ்ஸுக்கு போன் பண்ணி சொல்றேன்.

மனைவி: ஒன்னும் வேணாம்!

@ajmalnks

கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் - தமிழிசை

போட்டோஷாப்பிலேயே 4 1/2 ஆண்டுகள் ஆட்சி செய்த நீங்கள் அதை சொல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

@manipmp

டீ சர்ட் என்பது தொப்பைக்கான லெக்கின்ஸ்

@selvachidambara

உடல்நிலை சரியில்லாத போதும், டெல்லியில் கடும் வெயிலில்,கடினமான உழைப்பை வெளிப்படுத்தி நடித்துக் கொடுத்தவர் ரஜினி- ஷங்கர்.

ம் ம்.. நாட்டிற்காக செக்கிழுத்தார்

கல்லுடைத்தார் ரேஞ்சுக்கு இருக்கு

@amuduarattai

செய்தி: எதிர்க்கட்சித் தலைவர்கள் "பொய் சொல்லும் இயந்திரங்கள்". - மோடி.

பஞ்ச்: ஆமா நீங்க மட்டுமே டிஜிட்டல் அரிச்சந்திரன்.!

@parveenyunus

திமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது-ஜெயக்குமார்#

உங்க ஆட்சியில் ரெய்டு காய்ச்சல் தான் அதிகம்..அப்படிதானே..?

@Kannan_Twitz

குழந்தாய் வெடி வைத்து பழகுவதைவிட செடி வைத்து பழகு அதான் பூமிக்கு நல்லது!

சரி நகரு மாமா வெடி வைக்கனும்..

@yugarajesh2

அணு ஆயுதங்களை காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது-மோடி#ஏன்? நீங்க போட்டோ ஷாப்பை காட்டியே கதற அடிக்கப்போறீங்களா..?

-லாக் ஆஃப்

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon