மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

முதல் பார்வை: சர்கார்!

முதல் பார்வை: சர்கார்!

படத்திற்கு எதிராக உருவாகும் சர்ச்சைகளே படத்திற்கான விளம்பரமாக அமைவது சமீபகாலங்களாக விஜய் நடிக்கும் படங்களில் நிகழ்ந்துவருகிறது. சர்கார் படத்திலும் அதுவே நடந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் படம் வெளியீடு வரை பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்த சர்கார் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது. அதிகளவிலான திரையரங்குகள், போட்டிக்கு வலுவான படங்கள் இல்லாதது பார்வையாளர்களை சர்கார் பக்கம் திருப்பியுள்ளது.

இணைய உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பெரு நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் ராமசாமி (விஜய்). போட்டி நிறுவனங்களை அழித்து முடிப்பதற்காகவே ஒரு நாட்டுக்குள் நுழையும் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார். இந்திய நிறுவனங்கள் கதிகலங்கி போயுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது ஓட்டு வேறு ஒருவரால் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது தெரிகிறது.

தனது ஓட்டுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெறுகிறார். அந்த வெற்றி அரசியல் கட்சிகளின் கூடாரங்களை அசைத்து பார்க்கிறது. மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் நடத்தும் அரசியல் காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பான திரைக்கதையாக விரிகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தந்திரங்களில் தேர்ந்த ஒருவருக்கும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளாக உழல்பவர்களுக்கும் இடையேயான போட்டி விறுவிறுப்பைப் பற்றவைக்கிறது.

சர்கார் அரசியல் படம் என்பது டைட்டிலிலேயே சொல்லப்பட்டுவிட்டது. சமகால அரசியல் பிரச்சினைகளை, அரசியல் தலைவர்களை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் இயக்குநர் தேர்ந்துகொண்ட அரசியல் என்பது நுண் அரசியல் அல்ல; மேலோட்டமான அரசியல். ஒரு தனி நபரின் கோபம் எவ்வாறு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை மாஸ் நாயகனுக்கே உரிய ஆக்‌ஷன், விறுவிறுப்பு காட்சிகளுடன் அமைத்துள்ளனர்.

இந்த திரைக்கதையில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் எந்தெந்த வகையில் இணைகின்றனர்? அவர்களது பங்களிப்பு எப்படி? ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் வலு சேர்க்கிறதா? இறுதிவரை விறுவிறுப்பு தக்கவைக்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைக் காலை ஏழு மணி பதிப்பில் பார்க்கலாம்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon