மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

அதா ஷர்மாவின் ‘மெர்சல்’ கூட்டணி!

அதா ஷர்மாவின் ‘மெர்சல்’ கூட்டணி!

பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் சார்லி சாப்ளின் 2 படத்தின் பாடல் ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபு, பிரபுதேவா இணைந்து நடித்து 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி சாப்ளின். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சக்தி சிதம்பரம் தற்போது இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் சின்ன மச்சான் பாடல் ஏற்கெனவே வெளியாகி கவனம்பெற்றது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து பாடினர். தற்போது ‘ஐ வாண்ட் டு மேரி யூ மாமா’ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

கடற்கரைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் பாடல் காட்சியுடன், பாடல் உருவான விதமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. நீச்சல் உடையில் அதா ஷர்மா பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.

“கண்டதும் காதலா காட்டாதே பாவலா

உன்கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

கொக்கரக்கோ சேவலா கோழிக்கு நீ காவலா

நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா

ஐ வாண்ட் டு மேரி யூ மாமா”

என்று பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். ஜெகதீஷ் குமார், பார்கவி இணைந்து பாடியுள்ளனர். அம்ரிஷ் இசையமைப்பில் முந்தைய பாடலைப் போலவே இதுவும் ஆட்டம் போட வைக்கிறது.

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இதுதவிர தமிழில் பிரபுதேவா நடிப்பில் யங் மங் சங், தேவி 2, தேள், பொன்மாணிக்கவேல் ஆகிய நான்கு படங்கள் உள்ளன.

‘ஐ வாண்ட் டு மேரி யூ மாமா’

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon