மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

சென்ற அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் 30 சதவிகிதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான பணியமர்த்தும் விவரங்களை டைம்ஸ் ஜாப்ஸ் ரெக்ரியூடெக்ஸ் எக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்டோமொபைல், உள்கட்டுமானத் துறை, வங்கி உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் சென்ற ஆண்டை விட 30 சதவிகிதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பண்டிகை சீசனை முன்னிட்டு சில்லறை விற்பனைத் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையில் 8 சதவிகிதமும், வங்கி, நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் 6 சதவிகிதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

லாஜிஸ்டிக், விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகிய பிரிவுகளில் திறன்களுக்கான தேவை 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. நகர வாரியாகப் பார்த்தோமேயானால் அகமதாபாத்தில் திறன்களுக்கான தேவை அக்டோபரில் 8 சதவிகிதம் அதிகமாக இருந்துள்ளது. பெங்களூரு, லக்னோ, புனே, இந்தூர், சண்டிகர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதற்கான தேவை 3 சதவிகிதமாக இருந்திருக்கிறது. இப்பட்டியலில் சென்னை, மும்பை, வதோதரா ஆகிய நகரங்கள் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. திறன் வாரியாகப் பார்த்தால் 10 முதல் 20 வருட அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon