மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

வேளாண் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர்!

வேளாண் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் என்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க, கிரிஷ் வித்யாபீட துணைவேந்தர் விஸ்வநாதா தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டன. துணைவேந்தர் நியமனத் தகுதி குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் வள்ளுவபாரிதாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி விமலா.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 12) கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் என்.குமார் நியமனம் செய்யப்படுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இந்த உத்தரவுப்படி, டாக்டர் என்.குமார் மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பொறுப்பு வகிப்பார்.

இவர், 22 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர், தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர். இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். டாக்டர் என்.குமார், 13 பேருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளார். 18 ஆய்வுதாள்களைச் சமர்ப்பித்துள்ளார். அதோடு, தோட்டக்கலை அறிவியலுக்கான சர்வதேசச் சங்கம் வெளியிட்டுவரும் இதழுக்கான ஆசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon