மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

ஆதார் விவகாரம்: நிதி ஆயோக் சந்திப்பு!

ஆதார் விவகாரம்: நிதி ஆயோக் சந்திப்பு!

ஆதார் விவகாரம் தொடர்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில் துறையின் பங்குதாரர்கள் நிதி ஆயோக் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைக் கேட்டறிவதற்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்திருந்தது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் விவரங்களை வழங்கலாமே தவிர அவர்களைத் தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் விவரங்களை நீக்கிவிடும்படி தனியார் நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ள முடியும். வங்கிச் சேவைகள், தொலைத் தொடர்புச் சேவைகள் போன்றவற்றைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுதல் பற்றிய விவகாரம் தொடர்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைத் தொழில் துறையின் பங்குதாரர்கள் நிதி ஆயோக் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். இதுகுறித்து நிதி ஆயோக்கின் முதன்மை ஆலோசகரான ரத்தன் வட்டால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பங்குதாரர்களுடன் வட்டமேசைக் கூட்டம் ஒன்றை நான் நடத்தவுள்ளேன். டிஜிட்டல் பரிவர்த்தனைத் தொழில் துறையிடமிருந்து சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. அந்தப் பிரச்சினைகள் என்னவென்பதையும், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதையும் நாங்கள் ஆலோசிக்கவுள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமைப்புக்கு இடையூறுகள் ஏற்படும் என்று தொழில் துறை கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon