மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

களத்தை மாற்றிய பிரியா

களத்தை மாற்றிய பிரியா

திரைப்படங்களைப் போல வெப் சீரிஸ்களும் தற்போது பிரபலமாகிவிட்டதை உணர்ந்தபின் நடிகர், நடிகைகள் அந்தப் பக்கம் செல்வது அதிகரித்துள்ளது.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் பரவலான கவனம் பெற்றார். வைபவ் கதாநாயகனாக நடித்த மேயாத மான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.

இந்த நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 12) தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் சீரிஸ் ‘அமேசான் ப்ரைம்' இணையதளத்தில் வெளியாக உள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon