மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

சிறப்பாசிரியர் தேர்வு: வாரியம் மீது குற்றச்சாட்டு!

சிறப்பாசிரியர் தேர்வு: வாரியம் மீது குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு உடற்கல்வி சங்கம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய நான்கு பிரிவுகளில் 1,350 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,080 ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், தகுதியில்லாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தேர்வு குறித்து அறிவிக்கும்போது, உடற்கல்வியின் மூன்று பிரிவுகள் சிறப்பாசிரியர்கள் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூறப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான பின்பே இந்த விளக்கம் கூறப்பட்டதாகத் தெரிவித்தனர் சில உடற்கல்வி ஆசிரியர்கள். கடந்த மாதம், தேர்வாணையத்தின் தலைவரைச் சந்தித்துப் பேசினர் தமிழ்நாடு உடற்கல்வி சங்கத்தினர். அப்போது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததாகவும், தற்போது தங்களுக்கு முறையான பதில் அளிக்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாடு உடற்கல்வி சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று, சமீபத்தில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon