மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு!

இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், இங்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்வீடன் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோனிகா கபில் மேத்தா, நவம்பர் 12ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடந்த ’இந்தியா - ஸ்வீடன் தொழில் தினம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் நுகர்வோர் சந்தை முக்கியப் பங்காற்றுகிறது. இது ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்வதற்கு அளவுகடந்த வாய்ப்புகள் இருக்கின்றன. மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்வச் பாரத், டிஜிட்டல் இந்தியா, பொதுச் சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் முதலீடுகள் செய்யலாம்.

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் முக்கியமான நாடாக உள்ள இந்தியா, விரைவில் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டவுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி, விமான நிலையங்கள் மேம்பாடு, அதிவேக ரயில்கள், உயர்தர சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம். தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு, தேசிய நதிநீர் பாதைத் திட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஸ்வீடன் நிறுவனங்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்கும் அம்சங்களை அரசு எளிதாக்கி வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon