மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு பரிசு!

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு பரிசு!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குத் துணி மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று (நவம்பர் 12) ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 16 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 2650 சிறப்பு பேருந்துகள், 6,600 முறை இயக்கப்படவுள்ளன. 14 சிறப்பு ரயில்கள், 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 7 இடங்களில் அன்னதானம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின்போது 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில், துணி மற்றும் சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என கூட்டத்தில் ஆட்சியர் அறிவித்தார்.

இதுபோன்று, 2016ஆம் ஆண்டும் பக்தர்களுக்கு வெள்ளி,தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon