மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

'அடங்க மறு' ரிலீஸ்: ஜெயம் ரவி விளக்கம்!

'அடங்க மறு' ரிலீஸ்: ஜெயம் ரவி விளக்கம்!

தான் நடித்துவரும் படத்தின் ரிலீஸ் தேதி முன்னுக்குப்பின் முரணாக சிலரால் இணையத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரான ஜெயம் ரவியே தற்போது களத்தில் இறங்கி அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட படங்களை குறிப்பிட்ட தேதிகளில்தான் வெளியீடு செய்ய வேண்டும் என கோலிவுட்டில் புதிதாக விதிகள் போடப்பட்டபின் ரொம்பவே மாறியுள்ளது கோலிவுட். எனவே, ரிலீஸிற்காகக் காத்திருப்போர் தங்களின் படங்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல் மற்ற படங்களின் வெளியீட்டிலும் கவனம் செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் அடங்க மறு படம், டிசம்பர் மாதம் நடுவில் வெளியாகும் என சிலரால் கூறப்பட்டு வந்தது. பின்னர், டிசம்பர் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகலாம் என சிலரால் கூறப்பட்டது. இன்னும் சிலரோ, படங்கள் தொடர்ச்சியாக வெளியாவதால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இது வெளியாகும் என்றனர். இப்படியான முரண்பாடான தகவல்கள் இணையத்தில் வலம் வந்துகொண்டிருந்ததால் படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் சிலர் ஜெயம் ரவியை மென்ஷன் செய்துவந்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் நேற்று (நவம்பர் 12) இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிவொன்றை இட்டுள்ளார் ஜெயம் ரவி. அதில், "படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கும். எனவே தவறான தகவல்களை வைத்து யாரும் ரிலீஸ் தேதியை யூகிக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

ஜெயம் ரவியே தற்போது கூறியுள்ளதால் இன்னும் இப்பட ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon