மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

பிரதமர் மோடி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு?

பிரதமர் மோடி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு?

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் உரசல்கள் அதிகமாகியிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்... கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமை உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துவிட்டதாக இன்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்தைப் பறிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ரிசர்வ் வங்கியின் நிதி இருப்பில் சுமார் ஒருலட்சம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசு கேட்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். மேலும் பணமதிப்பழிப்பு திட்டத்திலும் மத்திய அரசோடு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை என்று அவர் கூறி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்றும் இதன் மூலம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்குமான பிரச்னைகளை தீர்க்க முயற்சி நடப்பதாகவும் ஊடகங்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon