மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

பருத்தி மானியம்: இந்தியா மீது புகார்!

பருத்தி மானியம்: இந்தியா மீது புகார்!

உலக வர்த்தக அமைப்பின் அனுமதி வரம்பை மீறி இந்தியா பருத்திக்கு அதிகமான மானியத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் சந்தை விலை ஆதரவில், உற்பத்தியின் மதிப்பில் 10 விழுக்காட்டை மட்டும் வழங்க மத்திய அரசுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி 2010ஆம் ஆண்டில் 53 விழுக்காடு முதல் 81 விழுக்காடு வரை மத்திய அரசு வழங்கியுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா வழங்கியுள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மனு குறித்து மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

எனினும், அனுமதி வரம்பை மீறி இந்தியா மானியங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா ஏற்கெனவே விடுத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவும் மறுப்பு தெரிவித்திருந்தது. 1986/88 ஆண்டுகளின் விலைகளுக்குப் பதிலாக அண்மைக்கால விலையின் அடிப்படையில் சந்தை விலை ஆதரவு கணக்கிடப்பட வேண்டுமென்று இந்தியா உள்பட 45 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இந்தியாவின் மதிப்பீடுகள் டாலரின் அடிப்படையில் இருக்கும்போது, அமெரிக்காவின் மதிப்பீடுகள் உள்நாட்டு நாணயத்தின் அடிப்படையில் இருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதலாகச் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பருத்தி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon