மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

திருமணத்திலும் போட்டி: தீபிகா - பிரியங்கா

திருமணத்திலும் போட்டி: தீபிகா - பிரியங்கா

பாலிவுட்டின் பிரபல நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இருவருக்கும் இதுவரை திரையில் போட்டி நிலவி வந்த சூழலில் தற்போது திருமணத்திலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரியங்காவின் திருமண தேதி முடிவானதிலிருந்து ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மற்றொரு பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோனுக்கு, பிரியங்காவின் திருமணத்திற்கு முன்பே வரும் நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், அவரை விட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் பற்றிதான் அதிக அளவில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தீபிகாவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே தொழிலில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் போட்டி என்று பாலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் கிட்டத்தட்ட பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார். தான் எது செய்தாலும் அதைச் சமூக வலைதளத்தில் தெரிவித்து அனைவரையும் தன்னைப் பற்றியே பேச வைக்கிறார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon