மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சபரிமலை: நீதிபதி அறையில் விசாரணை!

சபரிமலை: நீதிபதி அறையில் விசாரணை!

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினால், கேரளாவில் பல போராட்டங்கள் நடந்தன. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கவுள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில், சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் பிஜூ கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, மறுசீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. நீதிபதி அறையில்தான் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon