மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

பாலியல் புகார்: நவாஸுதினுக்குச் சிக்கல் இல்லை!

பாலியல் புகார்: நவாஸுதினுக்குச் சிக்கல் இல்லை!

பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் மீது மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் நடிகையுமான நிஹாரிகா சிங் பாலியல் புகார் அளித்திருந்தார். பாலியல் புகார்கள் பாலிவுட்டில் அதிகளவில் வந்துகொண்டிருப்பதால் நவாஸுதின் விவகாரமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நவாஸுதின் ஒப்பந்தமான படங்களிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நிஹாரிகா சிங் நவாஸுதின் மேல் அளித்த புகார் குறித்து மின்னம்பலத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். பாலியல் புகார் கூறப்பட்ட நடிகர்களுடன் பாலிவுட்டின் சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பணியாற்ற ஆர்வம் காட்டுவதில்லை. நவாஸுதின் தற்போது சேக்ரெட் கேம்ஸ் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாக பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக கெவின் ஸ்பேஸி என்ற அமெரிக்க நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த போது ஹவுஸ் ஆஃப் கா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக பிங்க் வில்லா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சேக்ரெட் கேம்ஸ் தொடரில் நடித்த குப்ரா சைத் இந்த விவகாரத்தில் நவாஸுதீனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து வாழ்ந்தது மீ டூ புகாரின் கீழ் வராது என அவர் கூறியுள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon