மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

அமெரிக்கச் சிறைகளில் 2,382 இந்தியர்கள்!

அமெரிக்கச் சிறைகளில் 2,382 இந்தியர்கள்!

முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் நுழைந்ததற்காக 2,382 இந்தியர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையினர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பஞ்சாபி சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டோனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களது குழந்தைகளை தனியாகப் பிரித்து வைக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2,382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவடஅமெரிக்க பஞ்சாபி சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கலிபோர்னியாவின் அடிலாண்டோ சிறையில் 377 இந்தியர்களும், இம்பீரியல் பகுதியில் 269 பேரும், விக்டோர்வில்லே என்ற இடத்தில்245 பேரும், வாஷிங்டனில் 115 பேரும் மற்றவர்கள் வெவ்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில்குடியேறுவதற்காக இவர்கள் 35 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துப் போலித் தரகர்களால் ஏமாந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்கச் சிறையில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாபி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon