மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து!

இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து!

சரக்குப் போக்குவரத்துக்காக இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை முதன்முதலாகப் பயன்படுத்திய நிறுவனமாக பெப்சிகோ இந்தியா இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பெப்சிகோ இந்தியா நிறுவனம் உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்களைத் தனது கொல்கத்தா ஆலையிலிருந்து வாரணாசிக்கு நீர்வழியாகக் கண்டெய்னர்களில் அனுப்பியது. நவம்பர் 11ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இந்தியாவின் முதல் பல்நோக்கு முனையத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், கொல்கத்தாவிலிருந்து வந்த பெப்சி கண்டெய்னர் சரக்குகளையும் வரவேற்றார்.

இந்த மேம்பாடு குறித்து பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அகமது எல்-ஷேக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிச் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும். இது நுகர்பொருள் உற்பத்தித் தொழிற்துறைக்குப் பெரிய சாதகமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

கொல்கத்தாவிலிருந்து பெப்சிகோ நிறுவனத்தின் சரக்குகள் அக்டோபர் மாதத்தின் இறுதியில் புறப்பட்டது. பெப்சிகோ இந்தியா நிறுவனம் மொத்தம் 16 கண்டெய்னர்களை அனுப்பியுள்ளது. இது 16 லாரிகள் ஏற்றிச் செல்வதற்கு நிகரான சரக்குகளாகும். கொல்கத்தா ஆலையில் உற்பத்தியான இந்த உணவுப் பொருட்களும், பானங்களும் வாரணாசியின் பல்வேறு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று பெப்சிகோ இந்தியா தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon