மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும்!

எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும்!

டிசம்பர் மாதத்தில் எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் எண்ணெய் விநியோகத்தைக் குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 12ஆம் தேதியன்று பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 2 விழுக்காடு உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் விலை வீழ்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே சவுதி அரேபியா எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதலாகவே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 விழுக்காடு சரிந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் உலகச் சந்தைகளுக்கு எண்ணெய் விநியோகத்தை ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்களாகக் குறைக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சவுதியின் ஆற்றல் துறை அமைச்சரா கலித் அல் ஃபலிஹ் நவம்பர் 11ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பருவகால தேவை குறைவால் டிசம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் விநியோகக் குறைப்பால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 0.5 விழுக்காடு சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon