மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

நீதிபதி ஹுலுவாடி ரமேஷூக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி!

நீதிபதி ஹுலுவாடி ரமேஷூக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு இட மாறுதலாகும் நீதிபதி ஹுலுவாடி ரமேஷுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

2016ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்தவர் ஹுலுவாடி ரமேஷ். இவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் மூத்த நீதிபதியாக (senior most judge of Madras High court)இருந்தவர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஹுலுவாடி ரமேஷ், இரண்டு முறை சென்னைஉயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். இவர், வருகிற 22ஆம் தேதி மத்திய பிரதேச நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இவர் மத்திய பிரதேசத்திற்கு மாறுதலாவதையடுத்து, அவரின் இடத்திற்கு புதியதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு இன்று(நவம்பர் 13) பிரிவு உபச்சார பிரிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் பேசிய அவர், “2 ஆண்டுகள் 7 மாதங்கள் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய சக நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. என் பணியில் நான் சிறந்து விளங்க அனைவரின் ஒத்துழைப்புமே காரணம். எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என கூறினார்.

தீர்ப்புகள்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியவர் ஹுலுவாடி ஜி ரமேஷ்.

மேலும் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பளித்தவர் இவர்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon