மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அசோக் லேலண்ட் லாபம் உயர்வு!

அசோக் லேலண்ட் லாபம் உயர்வு!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.459.57 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.459.57 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது 2017ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஈட்டிய ரூ.334.25 கோடியை விட 37.49 சதவிகிதம் கூடுதலாகும். நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் சென்ற ஆண்டில் ரூ.6,076.38 கோடியிலிருந்து இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பரில் ரூ.7,607.98 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், அதன் தலைமைச் செயலதிகாரியாக உள்ள வினோத் கே.தசாரி நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளது. 14 ஆண்டுக் காலம் இந்நிறுவனத்தில் பணியாற்றிய அவர் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறுவதாகக் கூறியுள்ளார். அவர் 2019ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி வரையில் இப்பணியில் தொடருவார். இவரது ராஜினாமா கோரிக்கையை அசோக் லேலண்ட் தலைமைக் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வாகனச் சந்தையில் கடுமையான போட்டி நிலவி வந்தாலும் தங்களது நிறுவனம் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon