மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சில்லறை விற்பனைப் பணவீக்கம் வீழ்ச்சி!

சில்லறை விற்பனைப் பணவீக்கம் வீழ்ச்சி!

அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 3.31 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

நவம்பர் 12ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்தில் 3.7 விழுக்காடாக இருந்த சில்லறைப் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 3.31 விழுக்காடாகச் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 3.58 விழுக்காடாக இருந்துள்ளது. கிராமப்புறங்களில் அக்டோபர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 2.82 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 3.97 விழுக்காடாகவும் இருந்துள்ளது. எனினும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் இரண்டிலுமே நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கம் எதிர்மறையாக இருந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கம் கிராமப்புறங்களில் -0.57 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் -1.15 விழுக்காடாகவும் இருந்துள்ளது. எரிபொருள் விலைகள் 8.55 விழுக்காடு உயர்ந்துள்ளது. சுகாதாரப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை 7.92 விழுக்காடு உயர்ந்துள்ளது. போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புச் சேவைகளின் விலை 7.72 விழுக்காடு உயர்ந்துள்ளது. மறுபுறம், பருப்பு வகைகளின் விலை அக்டோபர் மாதத்தில் 10.28 விழுக்காடு சரிந்துள்ளது. காய்கறிகளின் விலை 8.06 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், சர்க்கரை மற்றும் இனிப்புகளின் விலை 7.64 விழுக்காடு உயர்ந்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon