மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சமீபத்திய ஐசிசி சர்வதேச தரவரிசை பட்டியல் இன்று (நவம்பர் 13) வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் தர வரிசை பட்டியலை அவ்வப்போது ஐசிசி வெளியிட்டு வருவது வழக்கம். ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போன்ற ஆட்டங்களில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டரில் சிறந்த வீரர்கள் குறித்து வெளியிடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் குறித்த தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் பேட்டிங்கில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

அணிகளின் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளன.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon